கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், கே. ஆர். பி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 241 கன அடியில் இருந்து 303 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரம் 52 அடியில் நீர்மட்டம் தற்போது 49 அடியாக உள்ளது. பாசன கால்வாய் மற்றும் ஆற்றில் வினாடிக்கு 12 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.