கிருஷ்ணகிரி ஒன்றியம் சாப்பரம் ஊராட்சிக்குட்பட்ட குட்டிகவுண்டனூர் கிராமத்தில் உள்ள வலம்புரி விநாயகர், மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக யாக வேள்வி, 108 மூலிகை ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித கலசங்களை ஆட்சியர்கள் தலையில் சுமந்தபடி மேளகர்த்தாங்களுடன் கோபுர கலசங்களுக்கு எடுத்துச் சென்று வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.