ராஜஸ்தானில் இருந்து உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி, கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டடியில் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமடைந்தார். கிருஷ்ணகிரி டேம் போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை
போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.