கிருஷ்ணகிரி: வடமாநில கும்பலை சேர்ந்த மேலும் ஆறு பேர் கைது

630பார்த்தது
கிருஷ்ணகிரி: வடமாநில கும்பலை சேர்ந்த மேலும் ஆறு பேர் கைது
ரிசர்வ் வங்கி மூலம் வெளிநாடுகளில் இரிடியம் விற்று பணம் பெற்று தருவதாக கூறி பல்வேறு மாநிலங்களில் ஏராளமானவர்களிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது குறித்து சி. பி. சி. ஐ. டி. விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடி தொடர்பாக பீகாரை சேர்ந்த சோனுகுமார்துபே (29) மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த ஜார்ஜ் தாம்ஸ் (35) உள்பட ஆறு பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி