கிருஷ்ணகிரி: புதிய துர்க்கையம்மன் ஐம்பொன்சிலைக்கு சிறப்புபூஜை

281பார்த்தது
கிருஷ்ணகிரி: புதிய துர்க்கையம்மன் ஐம்பொன்சிலைக்கு சிறப்புபூஜை
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய துர்க்கையம்மன் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று இந்த சிலைக்கு ராகுகால பூஜை நடைபெற்றது. பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்தனர். துர்க்கையம்மனை சுமந்து கோவில் பிரகாரத்தை சுற்றி உற்சாக வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி