கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.