கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.