கிருஷ்ணகிரி: நிலத்தகராரில் பெண் மீது சரமாரி தாக்கு.

0பார்த்தது
கிருஷ்ணகிரி: நிலத்தகராரில் பெண் மீது சரமாரி தாக்கு.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், தனது உறவினரான மல்லிகா என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக நிலப் பிரச்சனை தொடர்பாக மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மல்லிகாவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில், வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.