கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே குட்டிகவுண்டனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஜீரணோத்தாரண புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, ஊர் பொதுமக்கள் அனைவரும் புனித நீர் எடுக்க தென்பெண்ணை ஆற்றிற்கு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்று, புனித நீருடன் கிராமத்தை அடைந்தனர்.