கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே, உரிய அனுமதி இன்றி மண் கடத்திய லாரியை கனிம வளத் துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். மாவட்ட தனித்துணை வட்டாட்சியர் செந்தில்நாதன் தலைமையிலான குழுவினர் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் முறையான ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.