கிருஷ்ணகிரி மாவட்டம் கரடிகுறி அருகே கே.பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரிஷிகுமார் (32) என்ற லாரி டிரைவர், கடந்த ஒரு மாதமாக பிரிந்து சென்ற மனைவியை நினைத்து மனமுடைந்து சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இது குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.