கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு, கெளரவ விரிவுரையாளர் கார்த்திக் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும், கார்த்திக்கை மாணவியின் உறவினர்கள் தாக்கியதாக அவர் அளித்த புகாரின் பேரில், சரவணன் உள்ளிட்ட 6 பேர் மீது கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.