கிருஷ்ணகிரி அருகே கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா.

274பார்த்தது
கிருஷ்ணகிரி அருகே கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா.
கிருஷ்ணகிரியை அடுத்த வேட்டியம்பட்டி கிராமத்தில் நவசக்தி விநாயகர், மகாசக்தி மாரியம்மன், சத்தியம்மன் மற்றும் சித்தி ரக்கல் மாரியம்மன் கோயில் விழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் போது பெண்கள் கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். நேற்று காலை பொன்கூடை எடுத்து, ஏராளமான பெண்கள் மா விளக்கை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். கோவில் முன்பு ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதல் நிறைவேற்றினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி