கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பகுதியில் மகேஷ்குமார் (55) இவரது மனைவி லட்சுமி (42). இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் லட்சுமி வீட்டின் முன்பு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் லட்சுமியின் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி விட்டு, கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தள்ளி விட்டு தப்பி சென்றுள்ளார்.
அவர் கண் எரிச்சலுடன் அலறியபோது வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். மகேஷ்குமார் வெளியே வந்து விசாரித்தபோழுது திருடன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மத்தூர் போலீஸ் நிலையத்தில் மகேஷ்குமார் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.