கிருஷ்ணகிரி: ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நகர செயலாளர் நவாப் தலைமையில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, மற்றும் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி ஆகியோர், விழாவில் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, 100 கிலோ பிரமாண்ட கேக் வெட்டி 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரம், சில்வர் பாத்திரம், இஸ்திரி பெட்டி, புடவை, போன்றவற்றை வழங்கினர். இதில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.