கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி மலையில் மர்ம நபர்கள் புற்களுக்கு தீ வைத்ததால், சிறு மரங்கள் எரிந்து, பெரிய மரங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.