கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நேற்று (மார்ச்.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிபடி வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு பென்சன் 6,750 ரூபாய் வழங்க வேண்டும். அகவிலைப்படி மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார். இதில் திரளானோர் கலந்துக்கொண்டனர்.