கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரப்பம் வாரச்சந்தையில் யுகாதி பண்டிகை மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டு சந்தை கூடியது. இந்த ஆட்டுச்சந்தையில் ஆந்திரா மாநிலம் குப்பம் மட்டுமின்றி ஆம்பூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனை கொண்டு வந்திருந்தனர். இதனால் லட்சக்கணக்கில் ஆடுகள் விற்பனை ஆனது.