கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முறையான காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.