கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே குண்டலபட்டி ஊராட்சி கு. ந. கொட்டாய் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்தக் கடையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். புதிய ரேஷன் கடை திறப்பால் அப்பகுதி மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.