கிருஷ்ணகிரி: சாலையில் ஓடிய கழிவுநீரால் மக்கள் அவதி

562பார்த்தது
கிருஷ்ணகிரி: சாலையில் ஓடிய கழிவுநீரால் மக்கள் அவதி
கிருஷ்ணகிரி நகரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக சேலம் ரோட்டில் பாதாள சாக்கடை அடைத்து, கழிவுநீர் வெள்ளம் போல் சாலையில் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், கழிவுநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிதித்து நடந்து செல்ல அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி