கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஒட்டப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் திருமால் (21), வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றபோது, முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தின் திடீர் திருப்பத்தால் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான வடமலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் (35) மீது போச்சம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.