கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து காரிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள அப்புக்கோட்டை, மற்றும் தேசன்கொட்டாய் ஆகிய 2 கிராமங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கடந்த மூன்று மாதங்களாக வரவில்லை என்று அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.