கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில், பள்ளி மாணவி ஒருவரை இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான மாணவர்களில் ஒருவன், போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அந்த மாணவியுடன் பழகி புகைப்படங்களை மார்ஃபிங் செய்து ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், வீடியோ காலில் மாணவியை ஆடையின்றி நிற்க வைத்து அதனை வீடியோவாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் உட்பட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.