பூங்காவனத்தம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழா

685பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தாம்சன் பேட்டை பூங்காவனத்தம்மன் கோவிலில் மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் அலகு குத்தியும், எலுமிச்சை பழங்களை உடலில் குத்திக்கொண்டும் அம்மன் வேடம் அணிந்து ஆடியவாறு ஊர்வலமாக சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி