கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 58வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, சதுரங்க போட்டிகளில் வெற்றிபெற்ற 19 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேற்று பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, துணை ஆட்சியர் (பயிற்சி) கு. சௌமியா, மாவட்ட நூலக அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.