கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அவற்றை துறை சார்ந்த அலுவலர்களிடம் ஒப்படைத்து, உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தை மனுதாரர்களுக்குத் தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.