சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள World Skills Shanghai 2026 போட்டிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த பால்ராஜ் காந்தம்மாள் தம்பதியினரின் மகன் குமாரன் KB ராகுல் தகுதி பெற்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்ற தேசிய திறனாய்வுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இவர் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். நேற்று மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.