கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. வட்ட தலைவர் இளையவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.