தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை, ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று இரண்டாவது நாளாக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, வாழ்வாதார பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கண்டன கோஷங்கள் எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.