கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஊர்க்காவல் படை தின விழாவில், தஞ்சையில் நடந்த மாநில அளவிலான விளையாட்டு மற்றும் திறன் போட்டி கவாத்து பயிற்சியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி ஊர்க்காவல் படைக்கு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார். ஏரியா கமாண்டர் எம். கவுஷிக்தேவ் தலைமை தாங்கிய இந்த விழாவில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பங்கேற்றனர்.