கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி கே. ஆர். பி அணை 52 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது 1441.76 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 308 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விநாடிக்கு மொத்தம் 371 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் ஆற்றில் 359 கன அடியும், கால்வாய் வழியாக 12 கன அடியும் நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.