காவேரிபட்டிணம் அரசு பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்.

476பார்த்தது
காவேரிபட்டிணம் அரசு பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாமை தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் முனைவர். திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. ரமேஷ் குமார், பேரூராட்சி தலைவர் திருமதி. அம்சவேணி செந்தில் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி