கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் கிருஷ்ணகிரி வட்டக்கிளை தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்பட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதற்கு வட்ட தலைவர் இளையவன் தலைமை தாங்கினார். அனைத்து வட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.