கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் இன்று தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டு கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி முக்கிய சாலை வழியாகச் சென்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.