கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமில், நவீன கருவிகள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் பல்சுத்தம், பல்அடைத்தல், பல்வலி மருத்துவம் போன்ற சிகிச்சைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் மரு. இனியள் மண்டோதரி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.