கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இ. ஆ. ப. இன்று 06.11.2025 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவின் தரத்தை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர் திரு. ரமேஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் ஆட்சியர் கவனம் செலுத்தினார்.