கிருஷ்ணகிரி மக்களின் வசதிக்காக காலணி இணைப்பு சாலைக்கு நிலத்தை தானமாக வழங்கிய முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பி. கே. பி. எம். முனுசாமி கவுண்டரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பி. கே. பி. எம். சாலை பெயர் பலகையை, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.