கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்தில், தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப்பட்டது. காலை 11 மணி முதல் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக, சுயேச்சை மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் என மொத்தம் 27 பேர் வாக்களித்தனர். ஆணையாளர் சதீஷ்குமார் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்தார். தீர்மானத்திற்கு ஆதரவாக 27 கவுன்சிலர்களும் வாக்களித்ததால், புதிய தலைவர் தேர்வு நடைபெறும் நாள் குறித்து அரசு அறிவிக்கும் என ஆணையாளர் தெரிவித்தார்.