சூளகிரியில் சிறுதானிய திருவிழா-ஆட்சியர்தொடங்கி வைத்தார்.

289பார்த்தது
சூளகிரியில் சிறுதானிய திருவிழா-ஆட்சியர்தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வேளாண்மைத்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா மற்றும் வேளாண் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து, வேளாண் கண்காட்சியை பார்வையிட்டார். மேலும், சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்ப கையேடுகளை வெளியிட்டார். தொடர்ந்து, 14 விவசாயிகளுக்கு தார்ப்பாய், மண்புழு உரம், அசோலா பெட், கால்நடைகளுக்கான குடற்புழு மாத்திரைகள், மரம் அறுக்கும் கருவி, பட்டுப்புழு வளர்ப்பு கருவிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை சுமார் 59 ஆயிரம் ரூபாய் மானியத்தில் ஆட்சியர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி