கிருஷ்ணகிரி அருகே காத்தான்பள்ளம் புனித சூசையப்பர் ஆலயத்தின் 29ம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சூசையப்பர் எழுந்தருள, திரளான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர். சண்டம்பட்டி பங்கு தந்தை அருட்பணி ஆரோக்கியசாமி தேர்பவனியை தொடங்கி வைத்தார். அப்போது பக்தர்கள் உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.