கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கடந்த 16-ம் தேதி அங்காளம்மன் கோயில் திருவிழாவின் போது சந்தாபுரம் பிரசாந்த் தரப்பிற்கும் மகேந்திரன் மகன் ஆகாஷ் தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆகாஷ் கத்தியுடன் பிரசாந்த் தரப்பைச் சேர்ந்த 6 பேரை வெட்டியதில் காயமடைந்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் (23), சாண்டி (21), வெங்கடேஷ் (29) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், ராமு (22), அப்துல்கலாம் (22), சபரி (22), உமர் பாரூக் (22) ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.