கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு போலீசார் பாப்பாரப்பட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மயானம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற தமிழரசு (26) மற்றும் வல்லரசு (24) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.