கிருஷ்ணகிரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

652பார்த்தது
கிருஷ்ணகிரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து கட்டிகானப்பள்ளி வி.ஏ.ஓ. சரவணன் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த ஆணின் உடலை மீட்டு, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி