கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீரஆஞ்சநேய ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவன கோவிலில் 12-ஆண்டு வியாசராஜர் ஆராதனை விழா நேற்று நடைபெற்றது. ராம ஆஞ்சநேய சேவா சமிதி ட்ரஸ்ட், கமிட்டியினருடன் இணைந்து, நேற்று வேத பாராயணம், பஞ்சாமிர்த அபிஷேகம், ஆச்சார்யாரால் உபன்யாசம் நடந்தது. மேலும் புதுப்பேட்டை வீரஆஞ்சநேய பஜனா மண்டலியினரின் பஜனையும் பின்னர் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.