கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராதாமோகன் (59), பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது டூவீலர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஒசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.