கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் தேர்பட்டி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் (20 வயது, அரசு கலைக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்) தனது நண்பருடன் தென்பெண்ணையாற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கினார். சுமார் 20 மணி நேரத் தேடலுக்குப் பிறகு, இன்று காலை தீயணைப்புத் துறையினர் அவரது சடலத்தை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.