நல்லம்பள்ளி வட்டம் லளிகம் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் தொழிலாளி. இவரும், அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பருமான சத்ரியன் ஆகிய 2 பேரும் இன்று காலை நல்லம்பள்ளியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் அதியமான்கோட்டை நோக்கி சென்றனர். நல்லம்பள்ளி டாட்டா நகர் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பிரதீப் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் சத்ரியன் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவலர்கள், காயமடைந்த சத்ரியனை மீட்டு சிகிச்சைக் காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான பிரதீப்பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அதியமான்கோட்டை காவல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.