
தளி அருகே ஆசிரியரை தாக்கியவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாரகலப்பள்ளி கொடியாளத்தை சேர்ந்த தற்காலிக ஆசிரியர் மஞ்சுநாத், வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தளி அருகே கும்மளா அக்ரஹாரம் கிராமத்தில் பாப்பண்ணா என்பவர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பண்ணாவை கைது செய்துள்ளனர்.














