தளி அருகே மலையில் சுற்றித்திரிந்த 5 காட்டு யானைகள்.

0பார்த்தது
தளி அருகே மலையில் சுற்றித்திரிந்த 5 காட்டு யானைகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே தேவர்பெட்டா வனப்பகுதியில் இருந்து வந்த 5 காட்டு யானைகள் நேற்று காலை கிராமத்தில் பீதியை ஏற்படுத்தின. தேவர்பெட்டா மலை மீது சுற்றித்திரிந்த யானைகளை கண்ட பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் கூச்சலிட்டனர். யானைகள் ஒன்றுடன் ஒன்று முண்டியடித்துக்கொண்டு மாதேஸ்வரன் கோவில் பட்டிக்கட்டுகள், கைப்பிடி கம்பிகளை தாண்டி சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.